(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில்
கோயில் கொண்டு பேசுகின்ற தெய்வமாய் தேற்றா
மரத்தடி ஓலைக் குடிசையில் வீற்றிருக்கும், மாந்தர்கள் போற்றும் மாதரசியாம் அருள்மிகு
ஸ்ரீ அன்னை பள்ளையப் பேச்சியின் வருடாந்த திருவிழாவானது கடந்த (27)
ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகி, நேற்றைய தினம் (04)
திங்கட்கிழமையன்று அம்பாளின் திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுடன் இனிதே
நிறைவுபெற்றது.
திருவிழா
நிகழ்வின் இறுதி நாளாகிய நேற்றைய தினம் காலை விநாயகப்பானை வளைக்கும் நிகழ்வு
இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் அம்பாளிற்கான பள்ளையப்பானை
வளைக்கும் நிகழ்வானது ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் சிறப்புற
இடம்பெற்றது.
இறுதிநாள் திருவிழா நிகழ்வுகளில் மட்டக்களப்பு , அம்பாறை
மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாதிபர் இந்து கருணாரட்ன பூசை
வழிபாடுகளிலும், ஆலய வளாகத்தில் இடம்பெற்ற மஞ்சள் நீராடல் நிகழ்விலும் அவரது குடும்பசகிதம்
கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பள்ளையப் பேச்சி
பன்னிரெண்டாயிரம் பரிகலங்களுடன் பள்ளையம் கண்டு மகிழ்வுற்று வங்கக்
கடலுடன் சங்கமிப்பதற்காக திருக்கும்பங்களுடன் ஆலயத்திலிருந்து மாலை 7.30 மணியளவில் புறப்பட்டு திருக்கும்பங்கள் வங்கக்கடலில் சங்கமமானது.
இறுதிநாள்
திருவிழாவில் அம்பாளின் அருள் வேண்டி இலங்கையின் அனைத்து பாகங்களிலுமிருந்து
பல்லாயிரக்கணக்காண பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












