மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அத்துமீறி விவசாயம் செய்வோரை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களினால் அத்துமீறி விவசாயம் செய்யப்படுவதாக பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய அமைப்புகள் இது தொடர்பில் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு சென்ற அரசாங்க அதிபரை சந்தித்து பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துரையாடினார்.
இதன்போது அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது குறித்து பிரதியமைச்சர் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றார்.
இதன்போது இது தொடர்பில் எல்லைப்பகுதிகளுக்கு சென்று காணிகளை பார்வையிட்டு நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைப்பகுதிகளில் அத்துமீறிய விவசாய செய்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கையெடுக்குமாறும் அப்பகுதியில் இருந்து அவர்களை அகற்றுமாறும் பிரதியமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு இடையில் எல்லைப்பிரச்சினைகள் நிலவும் பகுதிகளில் கலந்துரையாடல்களை நடத்தி அவற்றினை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுக்குமாறும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து நடவடிக்கையெடுப்பதாகவும் அத்துமீறி பயிர்ச்செய்கை செய்வோரை அகற்ற நடவடிக்கையெடுப்பதாகவும் அரசாங்க அதிபர் பிரதியமைச்சரிடம் உறுதியளித்துள்ளதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.