களுதாவளை பொது சந்தையில் பொது சுகாதார பரிசோதகர்களால் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற மீன் வகைகள் கைப்பற்றி அழிப்பு.

( ரவிப்ரியா )
களுதாவளை பொது சந்தையில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் என  மீன் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது மனித நுகர்விற்கு
பொருத்தமற்றவகையில் காணப்பட்ட பெருமளவான மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும்  அவற்றினை விற்பனை செய்த விற்பனையாளர்களிற்கு எதிராக்  எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற மீன் வகைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வும் ஊட்டப்பட்டது.

      இந் நடவடிக்கையில் களுதாவளை பொது சகாதார பரிசோதகர் மு.கிருபாகரன்  பதில் மோற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.திருச்செல்வம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களான கு.குபேரன், பி.ராஜேஸ்வரன், ஆகியோர் ஈடுபட்டனர்.