அமைதியானதும் மற்றும் பயமற்ற சூழல் நாட்டில் காணப்படுவதன் காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் துவிச்சக்கரவண்டியில் பிரயாணம் செய்ததை இன்று நகரிற்கு அப்பால் உள்ள பாலமீன் மடுவில் காணமுடிந்தது.
ஜேர்மனிய மற்றும் பிரித்தானிய உல்லாசப் பிரயாணிகள் இன்று காலை துவிச்சக்கர வண்டியில் சென்று மட்டக்களப்பின் மரபுரிமை இடங்களான ஒல்லாந்தர் கோட்டை, அங்கிலிக்கன் தேவாலயம், மட்டக்களப்பு கேற், என்பவற்றைப் பார்வையிட்டு பாலமீன் மடுவில் உள்ள வெளிச் வீட்டைப் பார்ப்பதற்காக வருவதாகத் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறுகம்பையிலிரந்து புறப்பட்ட இவர்கள் நேற்று புதன்கிழமை கல்முனையில் தங்கி விட்டு இன்று காலை மட்டக்களப்பை வந்தடைந்ததாகக் கூறினர்.
அதே துவிச்சக்கர வண்டியில் சென்று இரவு பாசிக்குடாவில் தங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.












