கடமையில் இருந்த பொலிஸார் மீது தாக்குதல்

பொத்துவில் – பானம பகுதியில் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.



பானம பகுதியில் உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கிடைத்த, தகவலுக்கமைய விசாரணைகளை மேற்கொள்ளச் சென்ற பொலிஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய ஐவரடங்கிய குழு, மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.