வாழையூற்று ஞானசம்பந்தர் அறநெறிப்பாடசாலை நடாத்தும் இளையான்குடி மாறநாயனார் குருபூசை தினம்

இந்துசமய வரலாற்றில் போற்றத்தக்க 63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடிமாற நாயனாரின் குருபூசை தினமானது எதிர்வரும் 25.08.2014
அன்று  திங்கட்கிழமை இந்துமக்களால் கொண்டாடப்படவுள்ளது.

இந்தவகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் குச்சவெளி பிரதேச செயலகப்பரிவிற்ட்பட்ட வாழையூற்று கிராமத்தில் இயங்கிவருகின்ற ஞானசம்பந்தர் அறநெறிப்பாடசாலையில் இக்குருபூசைதினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

மேற்படி நிகழ்வானது அறநெறிப்பாடசாலை நடைபெற்றுவரும் வாழையூற்று பலநோக்குமண்டப கட்டிடத்தில் அன்றையதினம் காலை 10.30 மணிக்கு அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி. காயத்திரி சதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன் அவர்களும், வாழையூற்று கிராம உத்தியோகத்தர் திரு.ரி.விஜயநாதன், வாழையூற்று பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கிருபைராணி ஆகியோரும் வாழையூற்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர், மாணவர்களின் பெற்றோர், நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


இந்நிகழ்வில் குருபூசை வழிபாட்டினைத்தொடர்ந்து இளையான்குடி மாறநாயனாரின் சிறப்புக்களைபற்றிய மாணவர்களின் சொற்பொழிவுகள், அறநெறி பொறுப்பாசிரியரின்கீழ் இயங்கும் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இளையான்குடிமாற நாயனாரின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் அறநெறி மாணவர்களின் நாடகக்காட்சியும் ,மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.