(சிவம்)
மட்டக்களப்பு தாமரைக்கேணி பகவான் ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்ட சாயிகமலம் எனும் பெயரில் இன்று சனிக்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிலையத்தின் தலைவர் சி. சாமித்தம்பி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ சத்தியசாயி இலங்கை மத்திய சபையின் உபதலைவர் எஸ். பிரபாகரன் பிரதம அதிதியாகக்; கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.
புஸ்பாஞ்சலி, தீபாஞ்சலி, பஜனை, வேத பாராயணம்ஓதுதல் மற்றும் சாயி சேவை பணிகள் பல் ஊடக திரையில் காண்பிக்கப்பட்டன.
மத்திய அறக்கட்டளை செயலாளர் மாலா சபாரெத்தினம் அவர்களினால் நிலைய வளாகத்தில் தென்னை மரக்கன்று நடப்பட்டது.
கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழு தலைவர் ஞா. விநாயகமூர்த்தி மற்றும் சாயி அடியவர்கள் கலந்து கொண்டனர்.












