மட்டு மறைமாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி தூய இஞ்ஞாசியாரின் வருடாந்த திருவிழா கொடியிரக்கத்துடன் நிறைவு.

(uk batti)

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பாதுகாவலரும், கல்லடி – டச்பார் பங்கின் பாதுகாவலருமான புனித இஞ்ஞாசியாரின் வருடாந்த திருவிழா நிகழ்வானது கடந்த 25.07.2014 வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்பணி ஜீவன் அடிகளார் தலைமையில் திருக்கொடியேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகிய விழாவானது கடந்த (03) ஞாயிற்றுக்கிழமை திருக்கொடியிறக்கும் நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

இவ்வருடாந்த திருவிழாவின் இறுதி நவநாள் சிறப்பு கூட்டு திருப்பலியினை இயேசுசபைத் துறவி து.சகாயநாதன் அடிகளார் ஒப்புக்கொடுக்கொடுத்தார். மேலும் இத்திருவிழா கூட்டுத்திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள் மற்றும் அருட் சகோதரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இத்திருவிழா திருப்பலியில் பங்கிலும், அயல் பங்குகளிலுமிருந்து அதிகளவிலான இறைமக்கள் பங்குபற்றி இறையாசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.