உணவுகளைக்; சுகாதாரமாகக் கையாளும் முறைபற்றி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கான விழிபுணர்வுக் கூட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இரண்டாவது சுகாதார அபிவிருத்தித் திட்டம்-2014 இதன்கீழ் உலக வங்கியின் உதவியுடன் உள்ளுராட்சித் திணைக்களங்கள் ஊடாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் இடம்பெறுவதாக மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே. தேவநேசன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த கட்டமாக உணவகங்களில் தீவிர பரிசோதனை மற்றும் ஏ, பி, சி தரச் சாண்றிதழ்கள் வழங்குதல் என்பன இடம்பெறும் என சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சமூக சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
கட்டங்கட்டமாக நடாத்தப்படும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கல்லடி மற்றும் புளியந்தீவுப் பகுதிகளில் உணவகங்களை நடாத்தும் 50 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












