அம்பாறை, மத்தியமுகாம் சமுர்த்தி வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (9) கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள மத்தியமுகாம் சமுர்த்தி வங்கியில் ஊழல் மோசடி ஒன்று இடம்பெறுவதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து இச்சமுர்த்தி வங்கியில் சேவையை பெற்றுவரும் பொதுமக்கள் வங்கியில் பணத்தை பெறுவதற்கு சென்றபோது வங்கி புத்தகத்தில் பணத்துக்கான வரவு இருந்தபோதும் வங்கியில் உள்ள கணக்கு அறிக்கையில் அதற்கான பணவரவு குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரனையின்போது வங்கியில் கடமையாற்றும் பாண்டிருப்பைச் சேர்ந்த 43 வயதுடைய சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர், சமுர்த்தி வங்கியில் சேவையைப் பெற்றுவரும் 7 பேர்களின் வங்கி புத்தக்தில் பணத்தை மட்டும் வரவு வைத்துவிட்டு வங்கி கணக்கறிக்கையில் வரவு வைக்காது ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேலான பணத்தை கையாடல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக் குறித்த உத்தியோகஸ்தர், நாவிதன்வெளி பிரதேச செயலாளரிடம் தான் அந்த பணத்தை எடுத்துள்ளதாகவும் அதனை கடந்த முதலாம் திகதிக்கு முன்னர் திருப்பி தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த திகதிக்குள் குறித்த உத்தியோகஸ்தர் பணத்தை திருப்பி வழங்காது தலைமறைவாகி உள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (8) திகதி சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிஸார் நேற்று சனிக்கிழமை குறித்த உத்தியோகஸ்தரை கைது செய்ததுடன், இவர் 25க்கும் மேற்பட்டவர்களிடம் சமுர்த்தி முத்திரை பெற்று தருவதாக இலஞ்சமாகு பணம் பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவரை கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.