(சாம்பகீ )
தம்பலவத்தை கிராமமானது பல்நெடுங்கால வரலாற்றைக்கொண்ட ஒரு கிராமம் மட்டுமல்லாது சுமார் 220 குடும்பங்களைக்கொண்ட தம்பலவத்தை 107 b என்ற கிராம உத்தியோகத்தர் பிரிவையும் 800ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களைக்கொண்ட பாடசாலையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வருடாவருடம் ஏற்படும் வரட்சியில் இக்கிராம மக்களின் குடிநீர் கிணறுகள் சித்திரை மாத இறுதியுடனே வற்றிவிடுகின்றன. இதற்கு ஒரு காரணம் இக்கிராமத்தை செழுமைப்படுத்தும் பாவட்டங்குளத்து நீர் வற்றிவிடுவது என்றால் மிகையாகாது.
கடந்த வருட இறுதிமுதல் ஆரம்பிக்கப்படடுள்ள குழாய்மூலமான குடிநீர் விநி யோகத்திட்டம் இப்பகுதியினூடாக கொண்டுவரப்பட்ட போதும் குறித்த கிராமத்தில் நீர்த்தட்டுப்பாடு நிலவும் பாடசாலை, பாடசாலை வீதியின் இரு மருங்கிலுமுள்ள குடியிருப்புக்கள் சுமார் 80 ஆகியவை இத்திட்டத்தினுள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை இப்பகுதி மக்களுக்கும் இக்கிராமத்திற்கும் பெரும் துர்ப்பாக்கிய நிலையையே தோற்றுவித்துள்ளது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுப்பார்களாயின் பல்நெடுங்காலமாக எதிர்கொண்டுவரும் நீர்த்தட்டுப்பாட்டு பிரச்சினை நிலையிலிருந்து இப்பகுதி மக்கள் மீழ்ச்சியடைவார்கள் அன்றேல் எதிர்காலத்தில் இவர்கள் பிற பிரதேசங்களுக்கு இடம்பெயரும் நிலைதான் மிஞ்சும்.