மணிபுரம் முதற்படி நிலையத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி

(சதீஸ்)
மட்டக்களப்பு , ஆயித்தியமலை - மணிபுரம் முதற்படி நிலையத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று 7ம் திகதி மணிபுரம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மணிபுரம் முதற்படி நிலையத்தின் எற்பாட்டில் இடம்பெற்றது.

இப் போட்டி நிகழ்வு  மணிபுரம் முதற்படி நிலையத்தின் இயக்குனர் ப.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக உதவி கல்விப் பணிப்பாளர் சு.கணேஸ், கிராமிய மக்களை வலுவூட்டுவதற்கும் முன்னேற்றத்திற்கான சமூகம் (CARE ) அமைப்பின் பிரதிநிதி ரவி சுந்தரலிங்கம் அதிபர் த.கரிகாலன்,CARE அமைப்பின் பிரதிநிதி வசந்தா சுப்பிரமணியம் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் மணிபுரம் இளநிலா முன்பள்ளி,மகிழவட்டவான் ஸ்ரீ கிருஸ்ணா முன்பள்ளி,சின்னப்புல்லுமலை விழுதுகள் முன்பள்ளி போன்ற மூன்று முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுகள் இடம்பெற்றது.

கிராமிய மக்களை வலுவூட்டுவதற்கும் முன்னேற்றத்திற்கான சமூகம் எனும் அமைப்பின் உதவியினால் இம் மூன்று பாலர் பாடசாலைகளும் இயங்கிவருகின்றது. இவ் அமைப்பினால் கடந்த காலதங்களில் குடிநீர் கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதியினால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவ் அமைப்பினால் வேறு மாவட்டங்களுலும் இதேபோன்று சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

பின்தாங்கிய பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்காக கூடிய கவனம் செலுத்தி இவ் CARE அமைப்பு செயற்படுவதாக இதன்போது கருத்துத் தெரிவித்த அமைப்பின் பிரதிநிதி ரவி சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

இவ் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.