மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் அனுசரணையுடன் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மாவடிமுன்மாரி கிராம பாடசாலையில் கிழக்கு பல்கலைக்கழக 3ம் மருத்துவ அணி மாணவர்களால் இன்று (01-08-2014) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைதியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் கலந்துகொண்டனர். பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட வைத்தியசாலை மகிழடித்தீவு ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கனக்கான மக்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர்.
















