(சித்தாண்டி நித்தி) ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு-1 ஆ.டி.எஸ் வீதியியுள்ள வீடு ஒன்றிக்குள் இன்று அதிகாலை புகுந்த முதலையினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: மாவடிவேம்பு புகையிரத வீதியை கடந்தால் பல நீர் ஓடைகள் (வில்லு) விட்டு விட்டு காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் இவ் நீர் நிலைகள் வற்றாமல் இருந்ததினால் நீர் வாழ் உயிரினம் மட்டுமின்றி பல அடி நீளமான பெரிய முதலைகள் அதில் தான் வாழ்ந்து வந்தாகவும் இப்போது மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக அவ் நீர் நிலைகள் வற்றிப்போயுள்ளதினால் முதலைகள் அடிக்கடி வந்தாகவும் இதுபோன்றே இவ் முதலையும் வந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இவ் முதலை வேம்பு மணலை கடந்து மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் வந்துள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை வீட்டு உரிமையாளர் காலையில் நித்திரை விட்டு எழும்பி பார்க்கும்போது சுமார் எட்டு (8) அடி நீளமான முதலை ஒன்று சீறி சீறி தனது வீட்டு அருகில் கிடப்பதைக் கண்டதும் அயலவர்களை அழைத்து துரத்த முற்பட்டபோது சீறி பாய்ந்து துரத்துவதாகவும் இதனால் மக்கள் அச்சத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஊருக்குள் உட்புகுந்த முதலையை பிடிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










