கண் பார்வை பாதிக்கப்பட்ட முதியோருக்கு கண்வில்லைகள் வழங்கிவைப்பு


(ச.சதீஸ்)சமூக சேவைகள் அமைச்சின் முதியோருக்கான தேசிய செயலகத்தின் உதவியினால் வவுணதீவு பிரதேசத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டோருக்கு கண் வில்லைகள் நேற்று 13 ம் திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.                                      

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட முதியோர் ஐவருக்கு இக் கண்வில்லைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, சமூகசேவை உத்தியோகத்தர் T.விவேகராஜன் மற்றும் சமூக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் போன்றோரும் கலந்துகொண்டனர்.