மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்.

(ஜெயா)
தற்போது பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மூன்று விசேட பயிற்சி நெறிகள் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் கணணி வன்பொருள் (Computer Hardware- NVQ-4), இதற்கு
இரண்டு அமர்வுகளில் க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அலுமீனியம் பொருத்துதல் (Aluminum Fabrication-NVQ-5), இதற்கு ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்காகவும், தொழிலைத் தேடும் மாணவர்களுக்காகவும் 720 மணித்தியாலம் கொண்ட ஆங்கில பயிற்சி நெறி ஆகிய கற்கை நெறிகள் செப்ரம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் T.ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதற்கு மாணவர்கள் கல்வித்தகமை மற்றும் பாடசாலை விடுகைப் பத்திரத்துடன் உடனடியாக நேரில் சமூகமளிக்குமாறும் தெரிவித்தார். கற்கும் காலத்தில் மாதாந்தம் ரூபா.1000.00 கொடுப்பனவும், அரை மானியத்துடனான போக்குவரத்து பருவகால சீட்டும் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.