மட்டக்களப்பு ஏறாவூர் கருமாரியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு
உற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது
அன்னையின் இந்த வருடாந்த திருச்சடங்கின் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகவும் அற்புதம் நிறைந்ததாகவும் கருதப்படும் தீமிதிப்பு உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு தெய்வாதிகளகால் தீக்குளி காவல் செய்யப்பட்டு தீக்குளிக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ குருக்கள் மற்றும் தெய்வாதிகள் தீயில் இறங்கி தீமிதிப்பு உற்சவத்தினை ஆரம்பித்துவைத்தனர்.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அடியார்கள் கலந்துகொண்டனர்.
தீமிதிப்பு உற்சவத்தினையடுத்து தெய்வாதிகள் அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றதுடன் விசேட ஆசிகளும் வழங்கப்பட்டதுடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.