சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாம் நாள் திருவிழா

(நித்தி) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த (25) திங்கள்கிழமை ஆரம்பமாகியதுடன் தொடராக இன்று மூன்றாம் நாள் திருவிழா நடைபெறுகின்றன. நடைபெறும் உற்சவ திருவிழாவினை வன்னியனார் குடியினரால்  நடாத்தப்படுகின்றன.

இன்றை தினம் முருகப்பெருமானின் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெறவிருப்பதாக திருவிழா குடியனர் தெரிவித்தனர். காலையில் சுமார் 8.30 மணியளவில் விநாயகப்பெருமானுக்கு மஞ்சல் காப்புப்பூசை இடம்பெற்றதும் முருகப்பெருமானுக்கு 108 சங்காவிபிசேகமும் பின்னர் தம்ப விசேட அபிசேகப்பூசை நண்பகல் வசந்த மண்டபப்பூசை அதனைத்தொடர்ந்து சுவாமி உள்வீதி வருதல் என விசேட பூசை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக தெரிவித்தனர்.

நடைபெறும் மூன்றாம் நாளாகிய இன்று சித்தாண்டி சித்தரவேலாயுத சுவாமி இரவு சுவாமிக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதும் முதல் முதலாக ஆலயத்தின் வெளி வீதி வந்து ஆடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

இன்று சித்தாண்டி முருகப்பெருமானின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு ஆடியார்கள் வருகைதந்து ஆலயத்தில் நடைபெறும் விசேட பூசைகள் மற்றும் சங்காபிசேகப் பூசைகளிலும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருட்கடாச்சம் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றனர் இன்றைய திருவிழா குடியினர்.