(ச.சுரேந்திக்கா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவில் பல்தேவைக் கட்டடங்களுக்கான அடிக்கல்கல் நேற்று 27ம் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

ரூபா.10 இலட்சம் செலவு மதிப்பீட்டில் மாமாங்கம் கிராமத்தில் இப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
பொதுமக்களின் தேவைக்கேற்ப தேவையினை அறிந்து இவ் அரசாங்கம் அபிவிருத்தியை செய்துவருகின்றது. தற்போது "ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்" எனும் வேலைத்திட்டத்தினை நாம் இப் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்துள்ளோம் இத் திட்டம் வெற்றிகரமாக முடிவுற்றதும், தொடர்ந்து ஏனைய திட்டங்கள் ஆரம்பமாகும். இங்கு அபிவிருத்தி இல்லை என்று யாராலும் கூறமுடியாது. என இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்..
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'கடந்த காலத்தில் மாகாணசபையினை நாம் நிருவகித்தபோது அதன் செயற்பாடுகள், அபிவிருத்திகள் எவ்வாறு இருந்து?. தற்போதய ஆட்சி எவ்வாறு இருக்கின்றது?. இவ் வேறுபாடுகளை அனைவரும் விளங்கிக்கொள்வார்கள். இவை அனைத்தையும் நன்கு விளங்கிக்கொண்டு எதிர்காலத்தில் புத்திசாலித்தனமாக நாம் செயற்ட்டு சிறந்த முடிவுகளை எடுக்கவேன்டும்'. என கூறினார்.
இந் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பி.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் மற்றும் அரச அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.