மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நீர்வெறுப்பு நோய்கள் பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு

(சதீஸ்)
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில்"விசர் நாய்கடி இல்லாத இலங்கை" எனும் கருத்திற்கமைவாக நீர்வெறுப்பு நோய்கள் பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு நேற்று 22ம் திகதி திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்.அமிர்தலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய விலங்கு நோய் தடுப்பு பிரிவின் பொது சுகாதாரப் பரிசோதகர் ரவிச்சந்திரன் மற்றும் வலையிறவு பிரிவின் பொது சுகாதாரப் பரிசோதகர் வா.ரமேஸ்குமார்  போன்றோர் கலந்துகொண்டு விழிப்பூட்டல் கருத்துக்களை வழங்கினர்.

இச் செயலமர்வு இப் பிரதேசத்தின் திமிலைதீவு, வலையிறவு,புதூர், சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை  ஆகிய ஐந்து கிராம த்தைச் சேர்ந்த பொதுமக்களுக்காக நடாத்தப்பட்டது.

இதன்போது திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க பொது முகைமையாளர் நவரஞ்சன் , மாமாங்கம் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர் ப.முருகதாஸ் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.