மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொய்கா அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளரின் விஜயம்.


(ஜெயா)
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொய்கா அமைப்பினால் 30 கணனிகளைக் கொண்ட கணனிக்கூடம்  ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினை அவ்வமைப்பின்  இலங்கைக்கான பணிப்பாளர் சோ அவர்கள் நேற்று (24.08.2014) விஜயம் செய்து பார்வையிட்டார். அவர்களை கல்லூரியின் பிரதி அதிபர் ச.தியாகராசா அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்பதுடன், கல்லூரியின் இவ்வருட முன்னேற்றம் பற்றிய விளக்கத்தினை வழங்குவதனையும் படத்தில் காணலாம்.