கொக்கட்டிச்சோலை பனையறுப்பான பிரதேசத்தை பொன் செல்வராசா பா.உ மற்றும் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா பார்வை

கொக்கட்டிச்சோலை பனையறுப்பான் கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் காயமுற்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள் பொலிஸர் ஆகியோருக்கிடையிலான மேதலில் துப்பாக்கிச்சூட்டில் காயமுற்று
மட்/போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுபோதினி மற்றும் அவரது தாயாரான வள்ளியம்மா ஆகியோரை பார்வையிடுவதற்காக இன்று காலை வைத்தியசாலைக்குச் சென்று அவர்களிடம் சம்பவம் குறித்து ஆராய்ந்தனர்.



மற்றும் இது தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற இடத்தினை நேரில் பார்வையிடுவதற்கு பனையறுப்பான் கிராத்திற்கு விஜயம் மேற்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தினையும் அதனைச் சூழவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு இது தொடர்பில் அயலில் உள்ளவர்களிடம் இருவரும் வினவினார்கள்.

இவர்கள் அக்கிராத்திற்குச் செல்லும் போது மக்கள் மிகவும் பீதியுற்றநிலையில் தத்தமது இல்லங்களில் இருந்தமையையும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்கள் செல்லும் போது மக்கள் வெளியில் வந்து அவருடன் கலந்துiராடியதனையும் காணக்கூடியதாக இருந்தது.

இப்பிரதேசத்தில் பல பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

.