ஜெயந்திபுரத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமைக்கப்படும் பொதுக் கட்டடத்திற்கு அடிக்கல் வைப்பு

(ச.சுரேந்திக்கா)               பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை  வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்தேவைக் கட்டடங்களுக்கான அடிக்கல்கல்  நேற்று 27ம் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் நாட்டிவைக்கப்பட்டது.


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ​ஜெயந்திபுரம் கிராம சேவகர் பிரிவில் ரூபா.10 இலட்சம் செலவு மதிப்பீட்டில் பல்தேவைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.


இதுவரை காலமும் பல கிராமங்களில் பல்தேவைக் கட்டடம் இல்லாமையால் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில், கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான கிராமங்களுக்கு பல்தேவைக் கட்டடம் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்ததாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜாஅவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பி.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் மற்றும் அரச அதிகாரிகள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்