(சித்தாண்டி நித்தி) வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ் நடராஜசிங்கம் தலைமையிலான சமூகத்தினர் அனுபவப் பரிமாற்றம் செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மாதிரியான உள்ளுராட்சி மன்றமாகத்;திகழும் ஏறாவூர் நகர சபைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தனர்.
அங்குள்ள உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களைச் சந்தித்துடன் நகரபிதா செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிருவாகக் கட்டமைப்பினையும் பார்வையிட்டனர்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல கோடி ரூபா நிதியில் விஸ்தரிக்கப்பட்டு நவீன மயத்துடன் அழகுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ள புன்னக்குடா வீதி ,ஆற்றங்கரையோர மௌலானா பூங்கா மற்றும் நகர சபை சிறுவர் பூங்கா என்பனவற்றைப் பார்வையிட்டடு வியப்பும் மகிழ்ச்சியும் வெளியிட்டனர். அத்துடன் நகர பிதா அலி ஸாஹிர் மௌலானாவின் பணிகள் மற்றும் நிருவாகக் கட்டமைப்பு தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்தனர்.
இவர்களை ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் -உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் வரவேற்றதுடன் இவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










