திருகோணமலையில் கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் எழுத்து

(சக்தி)

கின்னஸ் சாதனைக்காக திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் அனிஸ்டஸ் - ஜெயராஜா அவர்கள் தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் எழுதவுள்ளதாகக் கூறினார்.

'பண நோட்டு இல்லாத உலகம்'  என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் எழுத்தி கின்னஸ் சானை ஒன்றினை நிலை நாட்டவுள்ளார். இம்மாதம்; 30 ஆம் திகதி திருகோணமலை சூசையப்பர் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


கிழக்கிலங்கை தமிழ் ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள இக்கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு, பேராதனைப பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம், யாழ் பல்கலைக் கழகம், போன்றவற்றிலிருந்து பேராசிரியர்களும், ஓய்வு நிலை பேராசிரியர்களும் கலந்து கலந்து கொண்டு இதனை மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் அனிஸ்டஸ் - ஜெயராஜா மேலும் தெரிவிததார்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவராகிய அனிஸ்டஸ் - ஜெயராஜா அவர்கள் நாவல், கட்டுதை என இதுவரையில் 25 நூல்கள் எழுத்தி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.