மட்டக்களப்பில் பனம்பொருட்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி

(சிவம்)

மட்டக்களப்பு மாவட்ட பனம்பொருட்கள் உற்பத்திக் கண்காட்சி மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இன்று (30)  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
பாரம்பரிய சிறுகைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பனம்பொருட்கள் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில்  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பனை ஓலையிலான உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், பனம்பொருள் அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரெத்தினம், பாரம்பரிய சிறுகைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தியமைச்சரின் தேசிய இணைப்பாளர் க. தங்கேஸ்வரி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பொது முகாமையாளர் டி.எம். ரி. எஸ். குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி நாளை (31) மாலை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.