இவ் வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழராக பேராசிரியர் மௌனகுரு "16ஆவதுகொடக்கே தேசிய சாஹித்திய விருது -2014"

(Ravindramoorthy)
கொடக்கே நிறுவனமானது ஒவ்வொரு வருடமும் தேசிய இலக்கிய வளர்ச்சிக்காக சிறந்த நூல்களை வெளியிட்டுவருகின்ற  சிங்கள, தமிழ், ஆங்கில எழுத்த்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக 'கொடக்கே சாகித்ய விழா" வினை நடத்தி  வருகிறது.

2014 ஆம் ஆண்டுக்கான  தேசிய சாஹித்தியா விருது விழா செப்டெம்பர் 4 ஆம் திகதி    பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் வால்டேர் மாறசின்ஹா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. கலை இலக்கியத்  துறையில்
சிங்கள-தமிழ்- ஆங்கில மொழி மூலம் பெரும் பணியாற்றிய மூத்த படைப்பாளிகள் மூவருக்கு  வாழ்க்கையில் ஒரு தடவை வழங்கும்
வாழ்நாள் சாதனை விருதும் இவ்விழாவில்வழங்கப் படுகிறது.

இவ்வருடம் இவ்விருது தமிழில் பேராசிரியர் எஸ்.மௌனகுருவுக்கும் சிங்களத்தில் பேராசிரியர் விமல் திசனாயக்காவுக்கும்
ஆங்கிலத்தில் பேராசிரியர் D.C.R.குணத்திலாகாவுக்கும்
வழங்கப் படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.  இவ்விழாவில் ஆதார சுருதி உரையினை  (key note Address) சிங்களத்தில்  பேராசிரியர் ரத்னசிறி அரங்கல அவர்களும் தமிழில் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்களும் வழங்குகிறனர்.