மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 18 வது திருவிழாவும்.நூல் வெளியீட்டு விழாவும்


(தில்லை)
கிழக்கிலங்கை சின்னக்கதிர்காமம் மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 18 வது திருவிழா இன்று மிகவும் சிறந்த முறையில் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன் ஒரு சிறப்பம்சமாக  கவிஞர் மண்டூர் அசோகாவினால் எழுதப்பட்ட மண்டூர் திருமுருகன் பாமாலை நூல் வெளியீட்டு விழாவும் ஆலய முன்றலில் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் திங்கட்கிழமை 08.09.2014 அன்று முருகப்பெருமானின் தீர்த்தோட்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.