இலங்கையின் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 206வது வருடாந்தப் பெருவிழா நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் கடந்த 19ம் திகதி வௌ்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
புனித கப்பலேந்தி மாதாவின் பெருவிழா கூட்டுப்பலி எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணியளவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையிலான அருட் தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்படும்.
இன்று 23ம் திகதி 5ஆம் நாள் திருவிழா அருட்தந்தை பி.சுகந்தன் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது, இதன்போது இவ் அலய பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களும் கலந்துகொண்டார்.
நாளையதினம் 6ம் நாள் திருவிழா அருட்தந்தை ரி.லோரன்ஸ் அவர்களினால் நடாத்தப்படவுள்ளது.












