மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் மாணவர், ஆசிரியர் மற்றும் நிர்வாக சமூகங்களோடு இணைந்து நடாத்தும் 3 வது 'மைக் நடைபவனி' நாளை 20.09.2014 சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகிறது.
இப்பவனியானது திருமலை வீதி வழியாக தயா ஸ்டோர்ஸ் வரை சென்று மீண்டும் அதே பாதை வழியாக புனித மிக்கேல் கல்லூரியை வந்தடைய இருக்கிறது.
பவனியை மட்டக்களப்பு ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான அதி வந். யோசப் பொன்னையா ஆண்டகைப அவர்கள் ஆரம்பித்து வைக்க இருக்கிறார்கள். தொடர்ந்து பவனியானது பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட் தந்தை டொமினிக் சுவாமிநாதன் தலைமையில் நிகழவிருக்கிறது.
இந்த வருடாந்த நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். கல்லூரியின் பெருமைகளையும் அதன் சரித்திரத்தையும், சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன இடம்பெறவுள்ள மைக் நடைபவனி 2014 மூலம் திரும்பவும் ஒரு முறை மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை, மாணவ சமுதாயத்தின் முழு உருவாக்கலிலும் அது எடுத்துக் கொண்டிருக்கும் - கொடுத்துக் கொண்டிருக்கும் மகத்தான பங்களிப்பு பற்றி எடுத்துச் சொல்ல பழைய மாணவர் சங்கம் முனைந்து நிற்கின்றது.
இம்முறை இந்நடைபவனி வெற்றிகரமானதாக அமைய வேண்டிய ஆயத்தங்களை பழைய மாணவர் சங்கச் செயலாளர் மைக்கலைற் ஐ. ஜே. சில்வெஸ்டர் தலைமையிலான குழு மும்முரமாக உழைத்து வருகின்றது.
மேலும் இந்நடைபவனிக்கு அனுசரணைகளும், பழைய மாணவர்களின் நன்கொடைகளும் பக்க பலமாக அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
"கடந்து வந்த பாதையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்திருக்க்pறது இந்தக் கல்லூரி, அகதிகளுக்குப் புகலிடம் வழங்கியிருக்கிறது இந்தக் கல்லூரி, பல உன்னத மனிதர்களை உருவாக்கித்தந்திருக்கிறது இந்தக் கல்லூரி.
எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கிறது!! ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாயிருந்தவர்களின் ஆன்மா இதனோடு நிலைத்திருக்கம் வரையிலும் அது தொய்வில்லாமல் தன் பணியில் நீடித்து நிற்கின்றமை கண்கூடு! நாளைய நாட்களிலும் இதுபோன்று என்றும் தலைநிமிர்ந்து நிற்க நம் ஆதரவைத் தந்து நிற்கவேண்டியது எம் கடமை. காலங்கள் மாறும், எம் கல்லூரி உயர்ந்த மாற்றங்களைக் காணத்தான் போகின்றது என்று எம் நெஞ்சில் பொறித்து வைப்போம்.
"கல்லூரியில் தம் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டால் மட்டும் போதாது இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் மட்டக்களப்பின் அடையாளச் சின்னமாக இருக்கின்ற கல்லூரியின் அபிவிருத்திக்கு தம்மாலான பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும், பிரதி வருடம் இந்த நடைபவனியினூடாக புனித மிக்கேல் கல்லூரியின் மகிமையை அனைவருக்கும் எடுத்துக் காட்ட எம்மோடு இணைய வேண்டும்." என்று புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கமும், கல்லூரி நிர்வாகமும்; அனைவரையும் கேட்டு நிற்கின்றது.












