(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற கடை உடைப்பு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து வாலிபர்களைக் கொண்ட கோஷ்டியொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பொலிஸார் கூறினர்.
சமீபத்தில் மன்னார் பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்று கொள்ளையிடுவதற்காக உடைக்கப்பட்ட வேளை இரண்டு வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் கைதிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் மூவரை ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்து விசாரணை முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலும் கூறினர்.
கைப்பற்றப்பட்டுள்ள இப்பொருட்கள் ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து கொள்ளையிடப்பட்டவையென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மூவரில் இரண்டுபேர் மன்னார் கடை உடைப்புடன் சம்பந்தப்பட்டவர்களென்று குறிப்பிடப்படுகிறது.


.jpg)
.jpg)
.jpg)










