(பழுவூரான்)

கல்விச் சேவைகள் அமைச்சினால் கஷ்ட, அதிகஷ்ட மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று(16) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்வி கோட்டத்திலுள்ள பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (முகாமைத்துவம்) மு.விமலநாதன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.