இரட்டைக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைகு உதவிகோரும் - ஓர் வறிய குடும்பம்

(சித்தாண்டி நித்தி) திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம், நடுப்பிரப்பந்திடல் கிராமத்தில் வசிக்கும் சிவநேசன் கௌசல்யாதேவி  தம்பதிகளின் இரு சிறு குழந்தைகள் ஆகிய தரணி மற்றும் தருன் 7½  வயது நிரம்பிய (இரட்டைக் குழந்தைகள்) இவர்கள் இருவரும் சாதாரண குழந்தைகளைப்போல் இல்லாமல் பேச்சுத்திறன் குறைவாகவும் சொல்வதை புரிந்துகொள்ளும் தன்மையற்றவர்களாகவும் வாழ்ந்துவருகின்றார்கள்.

இவர்கள் இருவரும் தம்பலாகாமம் தி/சாரதா வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்விகற்கின்றார்கள்.

இவ்விரு சிறுவர்களும் ஆட்டிசன் (மூளை வளர்ச்சி குன்றிய) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நோயினை குணப்படுத்துவதற்கு மருத்துவ வசதி குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்தியாவில் இந்த நோய்க்கான சிறப்பாக அமைக்கப்பட்ட சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள டி.ஒ.ஏ.எஸ்.ரி மருத்துமனையில் இருவரையும் சேர்த்துள்ளார்கள் எனினும் இது தனியார் மருத்துவமனை என்ற காரணத்தினால் மருத்துவ செலவாக 1600000 ரூபா (16 லட்சம்) தேவைப்படுகின்றது. சிகிச்சைக்கான செலவு மதிப்பீட்டுத் தொகையை வைத்திசாலை அறிவித்தபோது பெரியளவான தொகை பணத்தை தங்களால் செலுத்தமுடியாமல் வறிய குடும்ப நிலவரத்தையுடைய இக்குடும்பம்  செலுத்துவதற்குரிய வசதிகள் மிக மிக குறைவாக இருக்கின்றதாகவும் தங்களுடைய குடும்ப நிலமையை உணர்ந்து நல்ல உள்ளம் கொண்ட உங்களிடம்  உதவிகளை வேண்டி நிற்கின்றார்கள். 

எனவே இக்குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மருத்துவ செலவிற்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

எமது சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் நல்ல உள்ளம்கொண்ட நீங்கள் கீழ் வருகின்ற தகவலுடன் தொடர்பு கொள்ளலாம். 

1.    வங்கிக் கணக்கு:     இலங்கை வங்கி: 70266069
                                              ஹற்றன் நசனல் வங்கி: 031020277185

2. தொலைபேசி இலக்கம்:  0094772469735 குணரெத்தினம் தீபன்-மாமன் தாய்வழி)

3.வீட்டு விலாசம்: சிவநேசன் கௌசல்யதேவி  நடுப்பிரப்பந்திடல்,     தம்பலகாமம், திருகோணமலை