(சிவம்)மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் பொலித்தீன் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு நகர மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.
நகரில் பொலித்தீன் பாவனை அதிகரித்துள்ளதால் கட்டப்படுத்தும் நோக்கொடு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் வியாபாரிகளுக்கு பொலித்தீனின் பாதிப்பைப்பற்றி விளங்கப்படுத்துவதன் மூலம் பாவனையை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரலாம் என ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
யுனொப்ஸ் ( UNOPS ) அனுசரணையில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் இறுதியில் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாரிய அளவிலான பொலித்தீன்களை மீள் சுழற்சிக்குட்படுதுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

















