காலநிலை மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு

மட்டக்களப்பு சொண்ட் அமைப்பின் ஏற்பாட்டில் காலநிலை மாற்ற செயற்குழுவின் கலந்துரையாடல் நிகழ்வு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்தூராசா தலைமையில் கல்லடியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது அரச திணைக்களங்களும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உத்தியோகத்தர்களும் மற்றும் கமநல அமைப்புக்களின் உருப்பினர்களும் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் அமைப்பின் பணிப்பாளர் செந்தூராசா மற்றும் சொண்ட் அமைப்பின் உத்தியோகத்தர்களது ஆலோசனைகடகு அமைய காலநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வினை இலத்திரனியல் வலைப்பின்னலூடாக பரப்புதல் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்துதல் அத்துடன் மாற்றுப்பயிர்களை செய்கை செய்வதன் மூலமும் காலநிலை மாற்றத்திற்கு தாக்குப் பிடிக்கும் வகையிலான பயிரினங்களை பயிரிடுவதன் மூலமும் விவசாயிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் விலை நிர்ணயம் தொடர்பான காணப்படுகின்ற சிக்கல் நிலைகள். தூர்ந்து போன நிலையிலுள்ள சிறு நீர்த் தேக்கங்களை புணரமைப்புச் செய்யாததால் விவசாயிகளும் மக்களும் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பாக கலந்தாலோசித்து பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.