(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு
அருள்மிகு ஸ்ரீ ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு சின்னப்பு சிற்சபேஷன்
ஜீ கடந்த இரண்டு வருடங்கள் இந்தியா கோயமுத்தூர் சின்மயசாந்திபனி வித்யாமந்திர்
ஆசிரமத்தில் வேதாந்த குருகுலக் கல்வியினை நிறைவு செய்து மீண்டும் தாயகம் திரும்பிய
வேளை அவருக்கு சிவானந்தர் ஆச்சிரமத்திலும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில்
சுவாமி வேதாந்த ஆனந்த ஜீ தலைமையிலும் வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று
(05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிற்சபேஷன் ஜீ தனது முதல் சத்சங்கம் நிகழ்த்தியதனைத் தொடர்ந்து சைவ அடியார்களால் பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் அணிவித்தும் கௌரவிவிக்கப்பட்டார்.
இறுதியில் பக்தர்களுக்கு மதுரை மீனாட்சியம்பாளின் குங்குமப் பிரசாதம் மற்றும் புண்ணிய கங்கா நதி தீர்த்தம் என்பன வழங்கிவைக்கப்பட்டதுடன், வேதாந்த குருகுலக் கல்வியினை நிறைவு செய்த இவருக்கு இந்தியாவிலே பிரம்மச்சாரிய சபரிஈஸ்ஸ சைதன்ய சுவாமி எனும் நாமம் சூட்டப்பட்டதுடன், மட்டக்களப்பு சின்மயாமிஷன் ஆச்சாரியராக பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












