ஆழ்ந்த கப்பலை அனர்த்தத்திலிருந்து மீட்ட கப்பலேந்தி மாதாவின் வாவியினூடான திருச்சொரூப ஊர்தியின் பவனி - வீடியோ


(சிவம், சதீஸ்)

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதியில் மட்டக்களப்பு வாவியில் திருச்சொரூவப் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.

விசைப் படகுகளை இணைத்து அலங்கரிக்கப்பட்ட கப்பலேந்தி மாதாவைத் தாங்கிய திருச்சொரூப விசைப் படகு ஊர்தி ஆலயத்திற்கு முன்புள்ள அமிர்தகழி வாவியிலிருந்து ஆரம்பமாகி கல்லடிப் பாலத்தினூடாக நகர ஒல்லாந்தர்; கோட்டையைச் சென்று தேவாலயத்தை நோக்கிச் சென்றது.

200 வருடங்களுக்கு முன்பு டச்சுக்கோட்டையை நோக்கி வந்த கப்பலானது நீரினுள் அமிழும் நிலையில் உள்ளது கப்பலின் மாலுமி மாதாவிடம் கப்பலை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றினால் இவ்விடத்தில் ஆலயம் அமைப்பேன் என வேண்டியதற்கிணங்க கப்பல் தாழாது காப்பாற்றியமையினால் இவ் ஆலயம் நிர்மாணித்ததாக ஆலய பங்குத் தந்தை டி. ஏ. யூலியன் தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களாக வாவியில் திருச்சொரூப பவனி இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.