தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் புறக்கணிப்பு

இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அம்பாறை மாவட்டத்தில் இருந்து சென்ற முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் உட்பட அம்பரை மாவட்ட சிரேஷ்ட, மற்றும் மத்திய குழு உறுப்பினர்களுக்கு மாநாடு நடைபெறும் மண்டபத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், கட்சின் மத்திய குழு உறுப்பினருமான ஏகாம்பரம் மற்றும் அன்னம்மா உட்பட திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் நேசன், சுந்தலிங்கம் உட்பட பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ்கள் கிடைத்தே இம்மாநாட்டுக்கு சென்றதாகவும், அங்கே எமது பெயர் பட்டியலில் எனது பெயர் இன்மையினால் உள்ளே அனுமதிக்க முடியாதென்றும் தெரிவிக்கப்பட்டது, இது தொடர்பில் மேலும் விவாதிக்காமல் அவ்விடத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ள உள்ளோரின் பெயர் விபரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு , அதில் தனது பெயர் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதகவும், இருந்தும் நாளை நடைபெறும் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.