முல்லைத்தீவில் இளைஞர் மனதுக்கு ஆன்மிகசிந்தனை நிகழ்வு.



(மா.சசி)
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்டப் பணிமனையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டில் இளைஞர் மனதுக்கு ஆன்மீக சிந்தனை எனும் ஆன்மீக வேலைத் திட்டம் சனிக் க்pழமை காலை இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆன்மீக வேலைத்திட்டமானது முத்துஐயன்கட்டுச் சந்தியில் இருந்து ஊர்வலமாக சென்று முத்துஐயன்கட்டு இடதுகரை அ.த.க.பாடசாலையினை சென்றடைந்ததுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.



இந்து,பௌத்த,இஸ்லாமிய,கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 172 இளைஞர் யுவதிகள் கலந்தகொண்ட இவ் ஆன்மீக நிகழ்வில் இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ மதத்தலைவர்களால் தத்தமது மதரீதியான ஆன்மீக சிந்தனை வழங்வைக்கப்பட்டது.இந்து மத சிந்தனையினை எஸ்.கணபதிப்பிள்ளை குருக்கள் அவர்களும் இஸ்லாமிய மத சிந்தனையினை ஏம்.ஐ.பரீட் மௌலவி அவர்களும் கிறிஸ்தவ மத சிந்தனையினை அருட்தந்தை எஸ்.டி.வின்சன் அவர்களும் வழங்கிவைத்தனர்.

இந் நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி கே.சறோஜா,ஒட்டசுட்டான் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டீ.எம்.பி.பண்டார,பிரதி பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜீ.டபிள்யூ.சமன்,மாவட்ட சம்மேளனத் தலைவர் பா.விஜி மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளான எஸ்.தவசீலன்,கே.சிந்துஜன்,ஜே.சுகந்தன் சம்மேளனப் பிரதிநிதிகள் கலந்தகொண்டனர்.