மட்டக்களப்பு தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பல்திறன் கல்விக் கண்காட்சி நேற்று 15ம் திகதி பாடசாலையின் அதிபர் ஆர்.கிருஸ்ணபாலன் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்துவைத்தார்.
மேலும் இதன்போது மாகாண கல்வி அதிகாரிகள், மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர்,மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.












