(சிவம் , சதீஸ் & வரதன் )
மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 206 ஆவது வருடாந்த இறுதி நாள் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ( 28) நடைபெற்றது.
ஆலயத்திற்கு அடியவர்களால் பூஜைப்பொருட்கள் கொடுக்கப்பட்டதோடு அடியார்களுக்கு ஆராதனையின்போது சப்பிரசாதம் வழங்கப்பட்டன.
கூட்டுத்திருப்பலியை மட்டக்களப்பு , அம்பாரை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவின் தலைமையில் ஆலய பங்குத் தந்தை டி. ஏ. யூலியன் மற்றும் ஆயித்தியமலை நித்திய சகாய மாதா தேவாலய பங்குத் தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தை ஜிவராஜ் ஆகியோர் ஒப்புக் கொடுத்தனர்.
ஆலயத்தின் வருடாந்தக் கொடியேற்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.












