(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆண்மீக எழுச்சி பாதயாத்திரை குழுவினர் இன்று வியாழக்கிழமை (11) மதிய வேளை சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தினை வந்தடைந்தனர்.
இவ் யாத்திரிக குழுவினர் கடந்த 09.09.2014 ஆம் திகதி கால் நடையாக மண்டூர் கந்தசாமி முருகன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கிரான் குளம் சித்தி வினாயகர் ஆலயத்தினை அடைந்து அங்கிருந்து மயிலம்பாவெளி சித்தி வினாயகர் அலயததினை வந்தடைந்து இன்று சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்
இவர்கள் இங்கிருந்து இன்று இரவு வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் தமது யாத்திரையினை நாளை காலை வெள்ளிக்கிழமை (12) தொடர்ந்து வாகரை ஊடாக தமது பாதயாத்திரையினை மேற்கொண்டு வாகரை செல்வ வினாயகர் ஆலயத்தினை சென்றடைவார்கள்.
அங்கிருந்து சனிக்கிழமை (13) யன்று வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தினை சென்றடையவுள்ளனர்.
இதற்கான அனுசரனையை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கியுள்ளது


.jpg)










