மட்டக்களப்பு மாவட்டம் கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இம்முறை முதன் தடவையாக வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிறு காலை எட்டுமணியிலிருந்து பிரமமோற்சவப் பெருவிழா ஆரம்பமானது.
இதுவரை காலமும் இவ்வாலயத்தில் அலங்கார உற்சவமே இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினத்திலிருந்து வருடாந்தம் மகோற்சவப் பெருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா ஒக்ரோபர் 08 ஆம் திகதி புதன்கிழமை காலை சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவிருக்கின்றது.












