உரிய பாடசாலை கல்விச் சமூகம் விடுத்த வேண்டு கோளின்போரில் அவர் இந்த உதவியினை நல்கியதாகத் தெரிவிக்கின்றார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம், இக்குறித்த பாடசாலைக்குரிய நிதி ஒதுக்கீடும் அதற்குரிய கடிதமும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகத்திற்கு கிழக்கு மாகாணசபையிலிருந்து அனுப்பப் பட்டுள்ளது.
இந்நிலையில் நான்குமாதம் கழிந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் குறித்த பாடசாலை அதிபருடம் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்கள் தொடர்பு கொண்டு போட்டோ பிரதி இயந்திரம் கொள்வனவு செய்து விட்டீர்காளா கடிதங்கள் அனைத்தும் கிடைத்துள்ளதா? என வினவியபோது எமக்கு இதுவிடையமாக எதுவித பதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை என குறித்த பாடசாலை அதிபர் கோ.கருணாகரத்திற்கு பதிலளித்துள்ளார்.
உடன் மகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்கள் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது அப்படி ஒரு கடிதம் மாகாணசபையிலிருந்து வந்ததுதான், என்றார் அப்போது ஏன் குறித்த பாடசாலைக்கு அக்கடித்தினை அனுப்பவில்லை என வினவியபோது அவர் உரிய பதில் வழங்கவில்லை. என கோ.கருணாகரம் கூறினார்
இவ்விடயம் தொடடர்பில் இன்று வெள்ளிக் கிழமை நடைபெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்
நான்கு மாதாகாலமாக மாகாணசபையிலிருந்து வந்த கடித்தினை உரிய பாடசாலைக்கு அனுப்பவில்லை, அசமந்தப் போக்காகத்தான் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம் இயங்குகின்றது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் சபைக்குச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை அபிவிருத்திக்கு தடைக்கல்லாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இயந்திரமயமாக்கப்பட்ட இந்த நவீன உலகில் அதிகாரிகள் துரித கதியில் செயற்படும் பட்சத்தில் பிரதேசங்களின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்படும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.












