கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வரலாற்றைக்கூறும் நடுகல் பீடம் திறப்பு விழா!


(தில்லை > வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் முன்பாக இவ்வைத்திய சாலையின் வரலாற்றைக்கூறும்  நடுகல் பீடம் திறப்பு
விழா நேற்று  வைத்தியசாலை வைத்தி அத்தியட்சகர் ஆர்.முரளீதரன் தலைமையில்  நடைபெற்றது.

இந்த நடுகல் பீடத்தினை நிர்மாணிக்க திலகா வில்டிங் ஸ்ரோஸ் அழகுராஜா குடும்பத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர் 

இவர்களது அயராத முயற்சியின் பயணாக இந்நடுகைக்கல் நடப்பட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களான டாக்டர் சிறிநாத் அவர்களினால் நடுகைக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதோடு டாக்கடர் ஜேசுதன் அவர்களினாலும் கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களினாலும் நடுகைக்கல்லின் நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கருத்துரைத்த கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்.

இவ்வைத்தியசாலையானது பழம்பெரும் வரலாற்றைக்கொண்ட வைத்தியசாலையாகும் இவ்வைத்தியசாலையினை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டியது எமது ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

இவ்வைத்தியசாலைக்கு இன்னும் பல தேவைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது அதனை இவர்களைப்போன்ற தனவந்தர்கள் முன்வந்து செய்யுமிடத்து இவ்வைத்தியசாலை இன்னும் புத்துயர் பெற்று மக்களுக்கான சிறந்த பணியை செய்து கொண்டிருக்கும் அதற்காகவேண்டி இவ்வைத்தியசாலையில் தொழில்புரியும் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் இதனை அமைத்துத்தந்த அழகுராஜா குடும்பத்திகருக்கு வைத்தியசாலை சார்பாக நன்றியினையும் கூறினார்.