"நகருக்கு நகரம்" யூனியன் அஷ்சுரன்ஷ் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டம் அறிமுக நிகழ்வு

முதற்தர காப்புறுதி நிறுவனமாக விளங்கும் யூனியன் அஷ்சுரன்ஷ் நிறுவனத்தின் புதிய "சுப்பர் இன்வெஸ்டர்" திட்டத்தின் அறிமுக நிகழ்வினை முன்னிட்டு "நகருக்கு நகரம்" எனும் நிகழ்வு கடந்த 17ம் திகதி இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக யூனியன் அஷ்சுரன்ஷ் நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர் எம்.ஜெகவண்ணன் மற்றும் காத்தன்குடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி போன்றோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின்போது இசை நிகழ்வும் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.