
(பழுவூரான்)
கல்விச் சேவைகள் அமைச்சினால் கஷ்ட, அதிகஷ்ட மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு கடந்த19.09.2014 பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்வி கோட்டத்திலுள்ள பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் டே.இராஜகுமாரன் அவர்களும் சகோதரப்பாடசாலை அதிபர் சு.உதயகுமார் அவர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துசிறப்பித்தனர்.