திருகோணமலை, தம்பலாகமம் பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 228 ஜி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான சுசீலா பொடிமெனிக்கே என்பவர் செவ்வாய்க்கிழமை (23) பெண் ஒருவரால் தாக்கப்பட்டு தம்பலாகமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
'சகன அருண' என்ற வாழ்வின் எழுச்சித் திட்டத்திட்டத்தின் கீழ், சுயதொழில் ஊக்குவிப்புக்கான 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கும் நிகழ்வு முள்ளிப் பொத்தானை வாழ்வின் எழுச்சி வங்கியில் நடைபெற்ற போதே இவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இச் சம்பவம் குறித்து தப்பலாகமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.