மட்டக்களப்பில் இடம்பெற்ற 'சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிநெறி'

(சதீஸ்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் நிதி அனுசரணையுடன் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களத்தின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக திறன் அபிவிருத்தி பயிற்சிநெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இப் பயிற்சி கடந்த 13ம், 14ம் திகதிகளில் மட்டக்களப்பு  சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேற்படி பயிற்சி சுற்றாடல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாணவர்களின் திறன் அபிவிருத்தியை மேம்படுத்துவது பற்றி அமைந்திருந்தது.

சிறப்பு விருந்தினர்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கிழக்கு மாகாணம், பணிப்பாளர் எம்.சிவகுமார், சிரேஸ்ட சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை எஸ்.கோகுலன் மற்றும் முகாமைத்துவப் பயிற்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.