மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் ஆரம்பக் கல்வி ஆசிரிய மாணவர்களுக்கு நடைபெற்ற பயிற்சிப் பட்டறை

(Ravindramoorthy) ,
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆரம்ப கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை பேராசிரியர்.சி.மௌனகுரு தனது மாணவர்களுடன் இணைந்து  09.09.2014 அன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை  நடாத்தினார்.


ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு நாடகம் மூலம் எவ்வாறு உடல், உளத் திறனையும், கற்பனைத் திறனையும் வளர்க்கலாம்? என்ற கருப்பொருளில்  நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையில் 103 புதிய ஆசிரிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது உடல் உளப் பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆற்றுகை செய்யவும் பழக்கப்பட்டனர். மேலும் யானைகள், பூனைகள், எலிகள் என்பனவற்றை எவ்வாறு எளிதாக கடதாசி மூலம் உருவாக்கலாம் என்பதும், பின்பு அவற்றை எவ்வாறு பொம்மை நாடகம் ஆக்கலாம் என்பதும் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சியின் போது மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டு தமது திறைமைகளை வெளிக்காட்டிய ஆசிரிய மாணவர்களை பேராசிரியர் மௌனகுரு அவர்கள் புகழ்ந்து பேசுகையில்,  அடக்க ஒடுக்கமாக இருந்த அவர்களா இவர்கள்? என என்னை வியக்க வைத்த திறன் மிகுந்த மாணவர்கள்  இவர்கள் என பாராட்டியதுடன், பாடசாலை சென்று நமது மாணவச் செல்வங்களை எதிர்காலத்தில் உருவாக்கப் போகும் இவர்கள் திறனும், அறிவும், அர்ப்பணமும், பரந்த நோக்கும் மிக்கவர்களாக உருவாக்கப் படவேண்டும். அதனை செய்து கொண்டிருக்கும் கல்லூரிப் பீடாதிபதியும், உப பீடாதிபதியும், விரிவுரையாளர்களும் பாராட்டுக்குரியவர்கள்.' எனக் குறிப்பிட்டார்.

மிகச் சிறப்பான முறையில் பயிற்சி பட்டறையினை நடாத்தி, மாணவர்களை வழிப்படுத்தியமைக்காக பீடாதிபதியினால் பேராசிரியர் மௌனகுருவுக்கும் அவரது மாணவர் குழுவிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.